நகரி, ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாமர்ரு அரண்டல் பேட்டையை சேர்ந்தவர் பலகாணி வெங்கட் நாராயணா (வயது65). இவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு வெங்கட்ரமணா என்ற மனைவியும் மற்றும் ஜோதி, லதா, பிரசன்னா என்று 3 மகள்களும் உள்ளனர். மகள்கள் மூவருக்கும் திருமணம் நடந்து விட்டதால் அவர்கள் வேறுவேறு பகுதிகளில் வசிக்கின்றனர். தந்தை இறந்த செய்திக்கேட்டு 3 மகள்களும் நேரில் வந்து தந்தையின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்தனர். வழக்கமாக ஆண் பிள்ளைகள் தான் கொள்ளி வைப்பது உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபடுவார்கள். ஆனால் வெங்கட் நாராயணாவுக்கு மகன்கள் இல்லாததால் கொள்ளி வைப்பது யார் என்பது பற்றி உறவினர்கள் விவாதித்தனர். இந்நிலையில் மகள்கள் லதா, பிரசன்னா தந்தையின் பாடையை சுமக்க முன்வந்தனர். பெரிய மகள் ஜோதி இந்து சம்பிரதாயப்படி கொள்ளி வைத்து இறுதிச் சடங்கை முடித்து வைத்தார். மகள்களின் செய்கையை பார்த்து உறவினர்கள் கண்கலங்கினார்கள். பலரும் இவர்களை பாராட்டினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/three-daughters-performed-their-fathers-last-rites-in-the-absence-of-a-male-heir




