தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே துக்க வீட்டில் குளிர்சாதன பெட்டி பொருத்தும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார். மூதாட்டி உயிரிழப்பு தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள செம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துசசி (வயது 25). அதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள்(70) என்பவர் காலமானதைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக முத்து சசி அங்கே சென்றுள்ளார். குளிர்சாதன பெட்டிக்கு மின் இணைப்பு; மின்சாரம் தாக்கியது அங்கே பிரேதத்தை வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட குளிர்சாதன பெட்டிக்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக முத்துசசி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வாலிபர் பலி அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், முத்துசசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வாலிபரின் உடல் உடற்கூறாய்வுக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-dies-after-being-electrocuted-while-installing-refrigerator




