சூரி மீனவ கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். சிறந்த கதையை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார் என்று ‘மண்டாடி’ படத்தில் நடித்த சூரியை நடிகர் சரத்குமார் பாராட்டியுள்ளார். வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. நட்சத்திர பட்டாளத்துடன் ‘மண்டாடி’ தற்போது மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். “மண்டாடி” படத்தை பாராட்டிய சரத்குமார் இந்நிலையில் நடிகர் சரத்குமார்‘மண்டாடி’ படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “மண்டாடி திரைப்படத்தைப் பார்த்த பிறகு வார்த்தைகளே வரவில்லை. இந்திய திரையுலகில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு துணிச்சலான படைப்பு இது; கேட்பதற்கு மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை. முழுவதுமாக கடலிலேயே படமாக்கப்பட்ட இப்படம், பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளையும், கடலில் உள்ள சவால்களை எதிர்கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது. அன்பு மற்றும் தியாகங்கள் கலந்த ஒரு எளிய பாய்மர படகு பந்தயமாக தொடங்கி, பல உணர்வுப்பூர்வமான பரிமாணங்களை கொண்ட படமாக இது அமைகிறது. கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டிய சூரி முழு குழுவினருக்கும், குறிப்பாக இத்திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டு சிறப்பாக இயக்கிய இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கும் எனது வாழ்த்துகள். நடிகர் சூரி இக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்; சிறந்த கதையை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவருக்கு மற்ற நடிகர்களின் சிறப்பான ஒத்துழைப்பும், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. ஆஸ்கர் விருதுக்கு தகுதியான இப்படைப்பை உருவாக்குவதில் துணிச்சலையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/mandaadi-film-is-an-oscar-worthy-work-actor-sarathkumar




