தாளவாடி, தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டதால் 300 வாழைகள் நாசமாகின. காட்டு யானைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 45). விவசாயி. இவர் 3 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார். வாழைகள் சேதம் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்து வாழை மற்றும் தக்காளி செடிகளை நாசம் செய்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அட்டகாசத்தில் ஈடுபட்ட யானையை வனப்பகுதியில் விரட்டினர். யானையால் 300 வாழை, ½ ஏக்கர் தக்காளி செடிகள் நாசமாகின. எனவே வனத்துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தோட்டங்களுக்குள் யானைகள் புகாதவாறு அகழி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/wild-elephant-enters-garden-near-thalawadi-and-rampages




