மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்! 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ திறன் பயிறசி! 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடிபடையில் மருத்துவப் படிப்பு சேர்க்கை! TN Budget 2026 | மரிய வில்சன் மரிய வில்சன், ``தன்னை உயிராக நேசிக்கும் ஜென் Z தலைமுறையினரை தலைசிறந்த தலைமுறையினராக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் முதலமைச்சர். தமிழ்நாடு நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் தேசிய அளவில் நடந்த பல்வேறு குளறுபடிகள் எதிர்கால தலைமுறையினரின் எதிர்கால உயர்க்கல்வியைப் பெரிதும் பாதிக்கின்றன. இதனால், நீட் தேர்வை முறையாக ரத்து செய்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடிபடையில் மருத்துவப் படிப்பு சேர்க்கை நடக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது." என்றார், ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் உடன் கூடிய சைக்கிள்! மரிய வில்சன், ``அரசு மற்றும் அரசு நிதிநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2026-27 நிதியாண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் சுமார் 5.32 லட்சம் ஜென் Z மாணவர்களுக்கு ரூ.277 கோடி ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் உடன் கூடிய சைக்கிள் வழங்கப்பட உள்ளது." என்றார் புதிய திட்டங்கள் செயல்படுத்தக்கூடிய நிதி ஆதாரம் என்பது குறைவாகவே உள்ளது! நிதியமைச்சர் மரிய வில்சன், ``மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சொந்த வரி வருவாய் விகிதம், வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை என பல்வேறு நிதிநிலை குறியீடுகளில் தமிழ்நாடு இணை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையில் உள்ளது. மொத்த வருவாய் துறையில் வட்டி செலுத்துவதற்கான தொகையும், பொறுப்பேற்றுக்கொண்ட செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, புதிய திட்டங்கள் செயல்படுத்தக்கூடிய நிதி ஆதாரம் என்பது குறைவாகவே உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவோம். அதே நேரத்தில், மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்க, டெண்டர் எடுக்க கான்ட்ராக்டர்களிடன் கேட்கப்படும் தேவையற்ற சான்றிதழ்களில் போட்டியில்லாதவாறு மாற்றப்பட்டுள்ளது. டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. பல அரசு துறைகளில் பதிவு செய்யப்பட்ட கான்ட்ராக்டர்கள் மட்டுமே டெண்டர் எடுக்க முடியும் என்பதை மாற்றி, எந்தவொரு துறையில் பதிவு செய்திருந்தாலும் தகுதி இருந்தால் பிற துறை டெண்டர்களிலும் பங்கேற்க முடியும். இளைஞர்கள், சிறு தொழில்முனைவோர்களும் டெண்டர் எடுக்க ஏதுவாக, முதன்முதலாக குறைந்த மதிப்பில் உள்ள டெண்டர்களின் நடைமுறை எளிதாக்கப்பட்டிருக்கின்றன. " என்றார், `வெற்றி தமிழகம்' மரிய வில்சன் மேற்கோள் காட்டிய திருக்குறள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான். பொருள்: எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை. மேலும் மரிய வில்சன், ``தவெக அரசின் கோட்பாடுகள் - அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதி, சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, ஊழலற்ற நேர்மையான வெளிப்படைத்தன்மையுடனான அரசு. இதை சொன்னது மட்டுமல்லாமல் செய்தும் காட்டியிருக்கிறது தவெக அரசு." என்றார், மாபெரும் சரித்திர வெற்றிப் பெற்று ஜனநாயகனாக அமர்ந்திருக்கிறார் முதலமைச்சர்! - மரிய வில்சன் கொடுத்த இன்ட்ரோ "தனக்கு எல்லாம் கொடுத்த மக்களுக்காக நன்றிக்கடன் செலுத்துவதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய். பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்த்து மாபெரும் சரித்திர வெற்றிப் பெற்று ஜனநாயகனாக அமர்ந்திருக்கிறார் முதலமைச்சர்" என்கிற இன்ட்ரோவுடன் பேச்சை தொடங்கியிருக்கிறார் மரிய வில்சன். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறிய குறள் ஜே.சி.டி.பிரபாகர் வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறிய குறள் பொருள்: செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக தொடங்கியது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்! பட்ஜெட்டை வாசிக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன். தமிழக வெற்றிக் கழகத் அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சட்டமன்றம் வந்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்! சட்டசபையில் உதயநிதி. தமிழக வெற்றிக் கழகத் அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றம் வந்தார். அவரை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். இன்று பட்ஜெட் தாக்கல்! தமிழக வெற்றிக் கழகத் அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில், நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று காலை 10 மணியளவில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். என்னென்ன எதிர்பார்ப்புகள்? தவெக ஆட்சியின் முதல் பட்ஜெட் இது. தேர்தல் வாக்குறுதிகளில் தவெக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது. அதில் பெண்களுக்கு. மதிப்புமிகு மகளிர் திட்டம் - 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய், அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் - ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கல், வெற்றிப் பயணம் திட்டம் - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம், அண்ணன் சீர் திட்டம் - பெண்களின் திருமணத்திற்காக எட்டு கிராம் (ஒரு பவுன்) தங்கமும், தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீர். இளைஞர்களுக்கு. வேலைவாய்ப்பு தாமதச் சூழல் நிதி உதவி - வேலை தேடும் பட்டதாரிகளுக்கு ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ. 2,500 இளைஞர் நல நிதி, தவெக வாக்குறுதிகள் இளைஞர்கள் பங்களிப்பில் நமது நல்லாட்சி - ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் 'முதல்வர் மக்கள் சேவை நண்பர்' பதவியின் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்குத் தலா ரூ. 18,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு, வெற்றி தொழில் முனைவோர் திட்டம் - இளைஞர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்ற ரூ. 25 லட்சம் வரை பிணையமில்லாத் தொழில் கடன். அரசுப் பணியாளர்கள். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம். இப்படியான வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வாக்குறுதிகளில் என்னென்ன நாளைய பட்ஜெட்டில் இடம்பெற உள்ளது என்பதில் மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். யார்? எப்போது? நாளை தமிழ்நாட்டின் 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். இந்தப் பட்ஜெட் தாக்கல் நாளை காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது. நாளை மறுநாள் (ஆகஸ்ட் 6), தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார். நாளை பட்ஜெட் தாக்கல்! நாளை (ஆகஸ்ட் 5) தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இது தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும். இதனால், எப்போதையும் விட, நாளை நடக்க உள்ள பட்ஜெட் தாக்கலுக்கான எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/tamil-nadu-budget-2026-will-tvk-deliver-its-promises




