திருவனந்தபுரம், கேரளத்தின் முதல்-மந்திரி வி.டி.சதீசனுக்கு. சி.எம்.ஓ. கேரளம் என்ற பெயரில் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் உள்ளது. இந்த பக்கத்தில் முதல்-மந்திரியின் அலுவலக முக்கிய செய்திகள், அறிவிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவரது முகநூல் பக்கத்தில் இருந்து, ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆஷா தொழிலாளர்களுக்காக அறிவித்த உதவி தொகை விவரம் மற்றும் மிலாதுநபி தின வாழ்த்து குறித்தான 2 பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த பதிவுகளை திடீரென நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்க கோரியும், மீண்டும் அதனை பதிவேற்றம் செய்ய வலியுறுத்தியும் முதல்-மந்திரி வி.டி.சதீசன் சார்பில் மெட்டா நிறுவனத்திற்கும், மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்லாமிய தலைவர்களில் ஒருவரான காந்தபுரம் ஏ.பி.அபு பக்கர், பெண்களுக்கு எதிராக வெளியிட்ட கருத்து குறித்து வி.டி.சதீசன் முகநூலில் விமர்சித்து பதிவிட்டிருந்தார். அந்த பதி வும் நீக்கப்பட்டது. இதுதொடர்பாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளிக்கையில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/kerala-chief-ministers-facebook-posts-removed




