சென்னை, நவோதயா பள்ளிகளை தடுக்கும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசுக்கு கண்டனம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நவோதயா பள்ளிகள் தமிழகத்தை தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா பள்ளிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. ஊரக பகுதி மாணவர்களுக்கு உயர்தரமான சிபிஎஸ்இ கல்வியை முற்றிலும் இலவசமாக வழங்கும் நவோதயா பள்ளிகளை தடுக்கும் நோக்கில், விஜய் தலைமையிலான த.வெ.க அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பி-டீமாக நவோதயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தங்குமிடம், சத்தான உணவு, சீருடை மற்றும் புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அத்தகைய பள்ளிகளை தடுப்பதன் மூலம், தவெக அரசு திமுகவின் அதே மாணவர் விரோத பாதையையே பின்பற்றி, அதன் ‘பி-டீமாக’ செயல்படுவது ஏமாற்றமளிக்கிறது. பிடிவாத போக்கு எனவே, மாநில உரிமை என்ற பெயரில் அரசியல் செய்யாமல், மாணவர் நலனை கருதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளுக்கு தேவையான நிலங்களை தவெக அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் இந்த பிடிவாத போக்கை அரசு கைவிடாவிட்டால், பாரதிய ஜனதா கட்சி மாணவர்களுக்காக தொடர்ந்து வீதிக்கு வந்து போராடும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-condemns-tvk-government-for-blocking-navodaya-schools




