சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். ஆக்கி திருவள்ளூர் சார்பில் தமிழ் ஆக்கி லீக் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது. ரேலா ஆஸ்பத்திரி ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியன் வங்கி, வருமான வரி, தெற்கு ரெயில்வே. எஸ்.எம்.நகர், ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி, எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணியும், 'பி' பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஏ.ஜி.அலுவலகம், தயாந்த் வீரன்ஸ், பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ், இந்திய உணவு கழகம், ஐ.சி.எப். அணியும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-3' இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்குள் நுழையும். சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். தொடக்க நாளில் நடைபெறும் ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. -எஸ்.டி.ஏ.டி அணிகள் (பிற்பகல் 2.30 மணி) மோதுகின்றன. இது தவிர பெண்களுக்கு மினி லீக் ஆக்கி போட்டி நடத்தப்படுகிறது. இதில் 4 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தகவலை போட்டி அமைப்பு குழு தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது போட்டி இயக்குனரும், இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனுமான வி.பாஸ்கரன், டெக்னிக்கல் அதிகாரி முனீர் சேட், இந்திய அணி யின் முன்னாள் வீரர் திருமால்வளவன், சென்னை ஆக்கி சங்க செயலாளர் உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியில், போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுக் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/hockey/tamil-hockey-league-featuring-12-teams-kicks-off-in-chennai-tomorrow




