சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே, ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற ரான்சோ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை நடிகர் அமீர்கான் மறுத்துள்ளார். பாலிவுட்டில் அமீர் கான் நடிப்பில் வெளியாகி உலகளவில் ஹிட்டடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தில் வரும் ராஞ்சோ கதாபாத்திரம், சோனம் வாங்சுக்கின் வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து அமீர்கான் “3 இடியட்ஸ் திரைப்படம் சோனம் வாங்சுக்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்ற தவறான கருத்து நிலவுகிறது. அது உண்மையில்லை. இப்படம் எழுதப்பட்ட போது எங்களுக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு அவரை தனிப்பட்ட முறையிலும் தெரியாது. அதைத் தெளிவுபடுத்தும் அதே வேளையில், சோனம் வாங்சுக் தற்போது செய்து வரும் காரியம் முற்றிலும் சரியானது. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால் அவர் இந்தப் போராட்டத்தை இப்போது முடிக்க வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள். அவர் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அறியப்பட வேண்டியவர் அல்ல, அவரது பணிகள் முற்றிலும் தனித்துவமானவை. அவரை மதிப்பதற்கு அவர் ‘3 இடியட்ஸ்’ கதாபாத்திரத்தோடு தொடர்புபடுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று அமிர்கான் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சதுர் ராமலிங்கம் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஓமி வைத்யா அண்மையில் வெளியிட்ட வீடியோ குறித்தும் அமீர்கான் பேசினார். அந்த வீடியோவில், ஓமி வைத்யா சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, ரான்சோ கதாபாத்திரம் வாங்சுக்கை அடிப்படையாகக் கொண்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் ஆமீர்கானுக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்திய நிலையில், “வீடியோவில் சதுர் கூறியது தவறானது” என்று அமீர்கான் சுட்டிக்காட்டியுள்ளார். சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் முறையான கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி சோனம் வாங்சுக் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணா விரதம் இருந்து வருகிறார். 21-வது நாளாக உண்ணா விரதம் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. தற்போது உண்ணா விரதப் பந்தலில் இருந்து சோனம் வாங்சுக்கை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/is-sonam-wangchuk-inspire-rancho-in-3-idiots-aamir-khan-explains




