சென்னை, நடிகை நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் பகிரும் பதிவுகள் அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள திருக்குறள் ஒன்று இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்திய நிவேதா கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ் நடித்த 'ஒருநாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ். மதுரையை பூர்விகமாக கொண்ட அவர், பின்னர் உதயநிதி ஸ்டாலினுடன் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் நடித்தார். அதன்பிறகு 'மென்டல் மதிலோ' திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமானார். தொடர்ந்து ரவி மோகனுடன் 'டிக் டிக் டிக்', விஜய் ஆண்டனியுடன் 'திமிரு புடிச்சவன்', விஜய் சேதுபதியுடன் 'சங்க தமிழன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். திருக்குறள் பதிவு வைரல் இதற்கிடையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், தற்போது திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்" என்ற அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருக்குறளின் பொருள் இந்த குறளின் பொருள், ஒருவர் இல்லாதபோது அவரை பற்றி இழிவாக பேசுவதும், நேரில் சந்திக்கும்போது போலியாக நடந்து கொள்வதும் மிகவும் இழிவான செயல் என்பதாகும். இத்தகைய வாழ்க்கையை வாழ்வதை விட உயிரை விடுவது மேல் என்றும், அதுவே அறநூல்கள் கூறும் நற்பயனைத் தரும் என்பது ஆகும். ரசிகர்கள் கருத்து நிவேதா பெத்துராஜின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளநிலையில், யாருக்காக எதற்காக இந்த பதிவிட்டுள்ளார் என்று ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும். - திருக்குறள் 183 — Nivetha Pethuraj (@Nivetha_Tweets) August 4, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/whom-was-nivetha-pethuraj-referring-to-viral-thirukkural-post




