சென்னை, நேசித்தவர்களை இழப்பது, கடன் சுமை, காதல் தோல்வி, பொருளாதார காரணங்கள் போன்றவை ஒருவரின் மனநிலையை கடுமையாக பாதிக்கின்றன. இதில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை எனும் கொடிய முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். மனநல சேவை திட்டம் இதனை தடுக்கும் 2022-ம் ஆண்டு ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மனநல பிரச்சினையில் இருப்பவர்களுக்கு 14416 என்ற இலவச உதவி எண் மூலம் தொலைபேசி வழியாக 24 மணி நேரமும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இந்தசேவை குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:- மன உளைச்சல், மன கவலை, பாலியல் துன்புறுத்தல், உறவுகள் சார்ந்த சிக்கல்கள், தேர்வு பயம் உள்ளிட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் மக்கள் எங்களின் உதவி கோரியுள்ளனர். அவர்களுக்கு ஆலோசனைகளை கொடுத்துள்ளோம். இந்த அழைப்புகளில் ஏறக்குறைய 1,200 பேர் பல்வேறு காரணங்களால் தற்கொலை எண்ணத்தில் இருந்தனர். அவர்களுக்கும் தகுந்த மனநல ஆலோசனை வழங்கி, அவர்களது உயிரை காப்பாற்றியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/1200-people-in-tamil-nadu-who-were-contemplating-suicide-rescued-medical-officials




