சென்னை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;- வாழ்த்து தேசத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் தனது தொலைநோக்குச் சிந்தனையாலும், அயராத உழைப்பாலும் முன்னெடுத்துச் சென்று, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையையும், வலிமையையும் உயர்த்திப் பிடித்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘வளர்ந்த பாரதம்’ என்ற உயரிய இலக்கை நோக்கி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு தொடர்ந்து உழைத்து வரும் அவர்களின் பொதுவாழ்வுப் பணி மேலும் சிறக்கட்டும். பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், மனநிறைவுடனும் தொடர்ந்து தேசத்திற்கு சேவையாற்ற, எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/pm-modis-birthday-nainar-nagendran-wishes




