இம்பால், மணிப்பூர் மாவட்டம் தொபால் மாவட்டம் கான்கொபாக் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கிற்கு நேற்று மாலை 6.30 மணிக்கு காரில் வந்த நபர் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், கையெறி குண்டு வீசப்பட்ட இடத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கையெறி குண்டு வீசிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, இந்த கையெறி குண்டு வீச்சில் யாருக்கும் காயம் உள்ளிட்ட பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/grenade-blast-at-oil-pump-in-manipur




