சென்னை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. தமிழக பட்ஜெட் தமிழகத்தில் த.வெ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், இம்மாத இறுதியில் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் என்பதால், பொதுமக்களை கவரும் வகையிலான திட்டங்கள், அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 22-ந் தேதி வரை துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பட்ஜெட்டில் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது. அமைச்சரவை கூட்டம் இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு முக்கிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-cabinet-to-meet-today-under-the-leadership-of-chief-minister-vijay




