ஆமதாபாத், பாரா உலக வில்வித்தை சீரிஸ் (நிலை 3) போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் அரைஇறுதியில் உலக சாம்பியனான இரு கைகளும் இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவி 145-143 என்ற புள்ளி கணக்கில் சக நாட்டவரான சரிதாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார். தங்கப்பதக்கத்துக்கான இறுதி சுற்றில் ஷீத்தல் தேவி. கஜகஸ்தானின் அய்ஜதா செய்டானை சந்திக்கிறார். அரைஇறுதியில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை சரிதா வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் வாங் ஷூயிடிங்கை எதிர்கொள்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/othersports/para-world-archery-sheetal-devi-advances-to-the-final




