அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் நீர்ச்சந்தியைக் கடக்க முயன்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நேற்று (ஜூலை 8, 2026) தாக்குதல் நடத்தியது. இதனால், உலக நாடுகள் ஈரான் எண்ணெய்யை வாங்க தற்காலிகமாகக் கொடுத்திருந்த தடை நீக்கத்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. மேலும், ஈரான் மீது தொடர் தாக்குதலை நடத்தி முடித்திருக்கிறது அமெரிக்கா. இது குறித்து அமெரிக்காவின் ஒரு ராணுவப் பிரிவான மத்தியக் கட்டளையகம் (CENTCOM) தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது. ஈரான்- அமெரிக்காகச்சா எண்ணெய்: 26 ஆண்டுகளில் இல்லாத விலை குறைப்பு; சவுதியின் இந்த முடிவு இந்தியாவுக்கு குட் நியூஸா? "ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் தாண்டிச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதல்களுக்கு உடனடிப் பதிலடியாக, அமெரிக்க மத்தியக் கட்டளையக படைகள் ஜூலை 7 அன்று ஈரான் மீது புதிய சுற்றுத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. இதில் இலக்குகள் துல்லியமாகக் கணிக்கப்பட்டு, 80-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச வர்த்தக வழித்தடம் வழியாக நடைபெறும் உலகளாவிய வணிகப் போக்குவரத்தின் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, ஈரான் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், கடற்கரை ரேடார் தளங்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வசதிகள் மற்றும் ஹார்முஸ் நீர்ச்சந்தி பகுதியிலும் அதன் அருகிலும் இருந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) 60-க்கும் மேற்பட்ட சிறிய ரகப் படகுகள் மீது அமெரிக்கப் படைகள் அதிரடித் தாக்குதல் நடத்தி அவற்றைச் சேதப்படுத்தியுள்ளன. அண்மையில், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற 'எம்/டி அல் ரெகாயத்' (M/T Al Rekayyat), சவுதி அரேபியாவின் கொடியுடன் சென்ற 'எம்/டி வேதியன்' (M/T Wedyan) மற்றும் லைபீரியாவின் கொடியுடன் சென்ற 'எம்/டி சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி' (M/T Cyprus Prosperity) ஆகிய மூன்று வணிகக் கப்பல்கள் இந்த நீர்ச்சந்தியைக் கடந்தபோது ஈரான் படைகள் அவற்றின் மீது தாக்குதல் நடத்தின. அமெரிக்காரஷ்யா - உக்ரைன் போர்: "8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த எனக்கு இதை நிறுத்துவது ஈசி" - ட்ரம்ப் ஈரான் படைகளின் இந்தத் தேவையற்ற ஆக்கிரமிப்புச் செயல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாகவும் ஆபத்தான முறையிலும் மீறும் செயலாக அமைந்திருப்பதுடன், சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்துச் சுதந்திரத்தையும் சீர்குலைப்பதாக உள்ளது. இந்த ஒப்பந்தம் முறையாகப் பின்பற்றப்படாத போதோ அல்லது மீறப்படும் போதோ, அதற்கு ஈரானைப் பொறுப்பேற்கச் செய்வதற்கு அமெரிக்க மத்தியக் கட்டளையகப் படைகள் எப்போதும் ஆயத்த நிலையிலேயே உள்ளன" அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை எதிர்த்து ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் கசெம் கரிபாபாடி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "கடந்த மூன்று வாரங்களில், லெபனானில் சியோனிச அரசு (இஸ்ரேல்) மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டல் அறிக்கைகளின் காரணமாக, அமெரிக்காவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 1 மற்றும் 2 ஆகிய பிரிவுகளைத் தொடர்ந்து மீறியுள்ளது. அமெரிக்காவின் இந்த ஒப்பந்த மீறலால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்து ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுப்பதோடு மட்டுமல்லாமல், தனது தேசிய நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் கசெம் கரிபாபாடி. ஆக, இது ஈரான் - அமெரிக்கா மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளதைக் காட்டுகிறது. "9.1 கோடி ஈரான் மக்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால், போருக்குக் காரணம்." - ட்ரம்ப் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/us-strikes-iran-after-hormuz-tanker-attacks-tensions-escalate




