நத்தம், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய 2-வது ஆட்டத்தில் நெல்லை அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. டிஎன்பிஎல் 10-வது டிஎன்பிஎல் (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் போட்டியில் திண்டுக்கல் வெற்றி தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கியது. இன்று மதியம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை திரில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சேப்பாக் இன்றைய 2-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. அதிரடி பேட்டிங் நெல்லை அணியில் அதிஷ் எஸ்.ஆர். 24 பந்துகளில் 41 ரன்கள், ரித்திக் ஈஸ்வரன் 18 பந்துகளில் 36 ரன்கள், கேப்டன் சோனு யாதவ் ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 35 ரன்கள், முகமது அத்னான் கான் ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 200 ரன்களை தாண்ட செய்தனர். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி இதையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் நெல்லை அணி 204 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. அதிரடி பேட்டிங் வரிசையை கொண்ட சேப்பாக் இந்த இலக்கை எட்டுமா அல்லது நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றியுடன் தொடரை தொடங்குமா என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-nellais-explosive-batting-205-target-set-for-the-chepauk-team




