சென்னை சிந்தாதிரிப்பேட்டை கிடங்கில் கொளத்தூர் தொகுதியின் 14 பூத்களின் EVM மெஷின்களில் பதிவான வாக்குகளை சரிபார்க்கும் பணி ஐந்தாவது நாளாக நடந்து வருகிறது. EVM Verification "EVM இயந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை. தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் நீதிமன்றதை நாடுவோம்." என திமுகவின் என்.ஆர். இளங்கோவன் நேற்று பேசியிருந்தார். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் திமுகவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் சமீரன் இது குறித்து பேசுகையில், 'வாக்குச்சாவடி எண் 75 இல் பதிவான வாக்குகளை சரிபார்த்து, மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணி நடந்துகொண்டிருந்தது. குறைந்தபட்சமாக 500 முதல் 1400 வாக்குகள் வரைக்கும் பதிவு செய்து அவை முறையாக பதிவாகிறதா என்பது உறுதிசெய்யப்படும். வாக்குச்சாவடி எண் 75 இன் அந்த EVM மெஷினில் 412 வது வாக்கை பதிவு செய்யும் வரைக்கும் எந்த பிரச்னையும் இல்லை. EVM Verification அதற்கு மேல் வாக்கை பதிவு செய்கையில் விவிபாட் இயந்திரத்தில் லைட் எரியாமல் போய்விட்டது. இது இயல்பான தொழில்நுட்ப கோளாறுதான். வாக்குப்பதிவின் போதுமே சில விவிபாட் இயந்திரங்களில் இப்படி நடந்திருக்கிறது. அப்போது வேறு விவிபாட் இயந்திரத்தை வைத்து வாக்குப்பதிவை முடிப்போம். இங்கேயும் அப்படி செய்ய வழிமுறை இருந்தது. அந்த விவிபாட் இயந்திரத்தை மட்டும் மாற்றி மாதிரி வாக்குப்பதிவை தொடந்திருக்கலாம். இல்லையேல், ஒட்டுமொத்தமாக EVM மெஶினோடு அந்த செட்டையே மாற்றிவிட்டு, குலுக்கல் முறையில் வேறு 10 EVM செட்களை எடுத்து அதிலிருந்து ஒரு செட்டில் பரிசோதனையை தொடர்ந்திருக்கலாம். இவ்விரண்டும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்தான். ஆனால், திமுகவினர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதேமாதிரி, இன்னொரு EVM மெஷினில் வெளியே மார்க்கரில் எழுதப்பட்டிருந்த சீரியல் நம்பர் முறையாக இல்லை. அதற்கும் ஆட்சேபனம் தெரிவித்தார்கள். EVM Verification மெஷினை திறந்து நம்மால் சீரியல் நம்பரை உறுதிப்படுத்திவிட முடியும். அதற்கும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை' எனக் கூறியிருக்கிறார். திமுகவினர் ஒத்துக்கொள்ளவில்லையென்றாலும் மற்ற கட்சியினர் ஏஜெண்டுகளோடு அத்தனை நடைமுறைகளும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/booth-no-75-vote-no-412-what-went-wrong-with-the-kolathur-evm-verification




