பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன். இவரது மனைவி நடிகை லிசி. 1986-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக லிசி நடித்திருந்தார். கடந்த 1988-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘சித்ரம்’ திரைப்படத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் லிசி நடித்திருந்தார். நடிகை லிசி, இயக்குநர் பிரியதர்ஷனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இவர்களுக்கு கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சித்தார்த் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 38 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கியுள்ள விளம்பர படத்தில் லிசி நடித்துள்ளார். பிரபு, கல்யாணி பிரியதர்ஷன் இருவருடன் லிசி நடித்துள்ளார். நிஜத்தில் மட்டுமன்றி திரையிலும் கல்யாணிக்கு அம்மாவாக லிசி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் விளம்பர படத்தில் நடித்திருப்பது குறித்து லிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “பிரியதர்ஷனுடன் இணைந்து பணியாற்றி 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. மீண்டும் அவருடன் பணிபுரிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் கடைசியாக 'சித்ரம்' படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தோம். எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த விளம்பரத்தில் என்னுடைய மகள் கல்யாணி பிரியதர்ஷனுக்கு நான் ரீல் அம்மாவாக நடித்திருப்பதுதான். என்னுடைய சிறந்த மற்றும் மோசமான முகக் கோணங்கள் என்னென்ன, என்னை எப்படித் திரையில் அழகாகக் காட்ட வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் எனக்கு ஒரு பிக்னிக் ஸ்பாட் போலவும், பழைய நினைவுகளின் சுழலாகவும் இருந்தது” என கூறியுள்ளார். நீண்ட வருடங்களுக்குப் பின்பு திரையில் லிசி தோன்றவுள்ளது நினைவுக் கூரத்தக்கது. பிரியதர்ஷன் – லிசி இருவருமே விவகாரத்துக்கு பின்பும் கூட சமீபத்தில் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் பிரியதர்ஷன் உறுதிப்படுத்தியிருந்தார். பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்சய் குமார் நடித்த ‘பூத் பங்களா’ படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/lissy-to-reunites-with-priyadarshans-film-after-38-years




