சென்னை, திருவேற்காட்டில் காய்ச்சலால் அவதிப்பட்ட 1 வயது குழந்தை உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். ஒரு வயது குழந்தை பலி சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பாபு - சங்கீதா தம்பதியினருக்கு கடந்த ஆண்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் ஒருவரான ஒரு வயதான கிருதன் கடந்த 2 நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனைத்தொடர்ந்து, பெற்றோர் அவரை சிகிச்சைக்காக பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கனிமொழி வேதனை இந்தநிலையில், திருவேற்காட்டில் காய்ச்சலால் அவதிப்பட்ட 1 வயது குழந்தை உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- திருவேற்காட்டில் காய்ச்சலால் அவதிப்பட்ட 1 வயது குழந்தை உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகிவரும் நிலையில், மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய அரசு, தற்போது இடைத்தேர்தலில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் தாராபுரத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோன பின், தவெக அரசு இதற்குப் பொறுப்பேற்று, மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/1-year-old-child-suffering-from-fever-dies-in-thiruverkadu-mp-kanimozhi-expresses-anguish




