தோனி சுற்றுப்பயணங்களின் போது தனது ஹோட்டல் அறையை சக வீரர்களுக்கு எப்போதும் திறந்தே வைத்திருப்பார் என்று ரஹானே தெரிவித்துள்ளார். இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியின் தலைமையில் விளையாடிய பல வீரர்கள், தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் அவர் வழங்கிய ஊக்கமும் நம்பிக்கையும் குறித்து பலமுறை பகிர்ந்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வ பெற்ற இந்திய மூத்த வீரர் அஜிங்யா ரஹானே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆடிய போது முன்னாள் கேப்டன் டோனியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தை யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ள ரஹானே கூறும் போது, “டோனி மிகவும் அமைதியானவர். எளிமையானவர். மற்றவர்களை போலவே அவரும் சாதாரண ஒரு மனிதர். யார் வேண்டுமா னாலும், எப்போது வேண்டுமாலும் செல்லும் வகையில் அவர் தங்கியிருக்கும் ஓட்டல் அறையின் கதவு பெரும்பாலும் திறந்தே இருக்கும். இளம் வீரர்கள் அங்கு வந்து உரையாடவும், மனஅழுத்தத்தை மறந்து ஓய்வு எடுக்கவும் உதவுவார். பல முறை 10 முதல் 15 வீரர்கள் அல்லது ஒட்டுமொத்த அணியினருமே அவரது அறையில் இருந்திருக்கிறோம். ஆனால் அவரது அறை கதவு மூடியிருந்தால் மட்டும் யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி இருக்காது. அந்த ஒரு விதியை மட்டும் அனைவரும் மதித்தனர்” என்றார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/the-secret-of-dhonis-room-ajinkya-rahane-reveals




