ஜகார்த்தா, பிரதமர் மோடிக்கு இந்தோனேசியா நாட்டின் உயரிய விருதான பிந்தாங் அடிபூர்ணா ஆப் தி ரிபப்ளிக் ஆப் இந்தோனேசியா பதக்கம் வழங்கப்பட்டது. இந்தோனேசியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய தனிநபர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை மோடிக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ அணிவித்தார். உயரிய விருது இதுதொடர்பாக மோடி கூறும்போது, எனக்கு மிகுந்த அன்போடும் மரியாதையோடும் இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது. இவ்விருது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சொந்தமானது. இது இந்தோனேசிய மக்களின் உணர்வுகளையும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மற்றும் ஆழமான பிணைப்பையும் பிரதிபலிக்கிறது. அதிபர் பிரபோவோ, இந்தோனேசிய அரசு மற்றும் அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/prime-minister-modi-receives-indonesias-highest-award




