திருவள்ளூர், திருவள்ளூர் பழைய பேருந்து நிலையத்தில் ஏற்படும் கடுமையான நெரிசல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லுலூரில் ரூ.36 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இதில் பணிகள் முழுதுமாக முடிவதற்கு முன்னரே கடந்த மார்ச் 4-ந் தேதி திறக்கப்பட்டது. எனினும் புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. எனவே புதிய பஸ் நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் மீதம் உள்ள கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முழுவதும் முடிந்து உள்ளதால் திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் வருகிற 10-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரப்பட உள்ளது. அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாது என்று மாவட்ட கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruvallur-new-bus-stand-to-be-opened-from-10th




