சென்னை, நடப்பாண்டில், 'எல் நினோ' எனப்படும் கடல் வெப்பநிலை மாறுபாடு காரணமாக, நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை 15 சதவீதமாக உள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவமழை, ஜூன் 4-ல் கேரளாவில் தொடங்கியது. அதன்பின், ஜூலை 9-ல் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. வழக்கமாக செப்டம்பர் 17-ந்தேதி முடிவடையும் தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் சற்று தாமதமாக நேற்று விலகத் தொடங்கியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்மேற்கு பருவமழை, ராஜஸ்தானின் ராம்கர், மோகன்கர், பலோடி, கஜூவாலா ஆகிய பகுதிகள் வழியாக விலகத் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில், பஞ்சாப், குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்தும் பருவமழை விலகி விடும். இதையடுத்து, அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் படிப்படியாக பருவமழை விலகி, வறண்ட வானிலை நிலவும். எல் நினோ தீவிரமடைந்து வருவதால் நேற்று முன்தினம் நிலவரப்படி, நாட்டின் ஒட்டு மொத்த மழைப்பொழிவு, சராசரியை விட 15 சதவீதம் வரை குறைந்து, 69.5 செ.மீ., அளவு மட்டுமே மழை பதிவாகி உள்ளது. ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர், மாதங்களில் பெரும்பாலான இடங்களில் மழைப்பொழிவு இயல்பை விட குறைவாகவே இருந்தது. நாட்டின் 43 சதவீத பகுதிகள் நடப்பாண்டில் மழை பற்றாக்குறையை சந்தித்து உள்ளன. குறிப்பாக, தென் மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு 28 சதவீதம் மழை குறைவை சந்தித்துள்ளன. இதில், ஆந்திரா 43 சதவீதம், கர்நாடகா 31 சதவீதம், கேரளா 28 சதவீதம், தமிழகம் 22 சதவீதம், தெலுங்கானா 21 சதவீதம் வரை மழை குறைந்துள்ளன. பருவமழை விலகத் தொடங்கினாலும், அடுத்த சில நாட்களில் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, ஒடிசா மற்றும் ஆந்திர கட லோரங்களுக்கு இடையே கரையை கடக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/weather/southwest-monsoon-withdraws-15-deficit-in-tamil-nadu-compared-to-normal-levels




