புதுடெல்லி, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு(இ.பி. எப்.ஒ/ கட்டாய ஊதிய உச்ச வரம்பினை மாதத்திற்கு ரூ.15,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்தி உள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு வலைக்குள் கூடுதலாக 1 கோடி தொழிலாளர்களை இணைக்கும் நோக்கில் இந்த புதியமாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது. பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 15,000 எல்லையைக் தாண்டியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட உச்ச வரம்பின்படி, ஊழியர்கள் தங்களது வைப்புநிதி சேமிப்பிற்கு மாதந்தோறும் ரூ. 3,000 பங்களிப்பாகச் செலுத்த வேண்டும். இது முந்தைய உச்ச வரம்பின் அடிப்படையில் செலுத்தப்பட்ட ரூ. 1,800ஐ விட அதிகமாகும். இதேபோல், முதலாளியின் பங்களிப்பும் மாதத்திற்கு ரூ. 917 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், முதலாளி பங்கிலிருந்து ரூ.2,083 ஓய்வூதிய நிதியத்திற்குச் செல்லும். டெல்லி, மராட்டியம், கர்நாடகா, அரியானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட குறைந்தபட்சம் 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட எல் லையைத்தாண்டியுள்ளதால், இந்த புதிய நடவடிக்கை பலரும் பலனடைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/pf-monthly-contribution-increases-to-rs-3917




