தமிழ்நாட்டில் விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக அடித்தளம் அமைத்துக் கொடுத்த அரசுப் பள்ளிகள் பலவற்றில் தற்போது மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைவு எனச்சொல்லி மூடப்பட்டு வருகின்றன. பொதுப் பள்ளியாக இருந்தாலும் பல அரசு பள்ளிகள் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளி என்கிற மனநிலையில் அரசு தொடக்கப்பள்ளிகளை பெற்றோர் புறக்கணித்து வருகின்றனர். ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற பள்ளி அதையும் மீறி அர்ப்பணிப்பு மிகுந்த சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு அரசுப்பள்ளிகளை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் சேலம் மாவட்டம் கொண்டப்பப்நாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளி தமிழ்நாட்டில் ISO தரச்சான்று பெற்ற அரசுப்பள்ளி என்கிற சாதனையைப் படைத்திருக்கிறது. இது குறித்து பேசும் பள்ளி ஆசிரியர்கள், " தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் இந்த அரசுப்பள்ளியை தரம் உயரத்த வேண்டும் என்பதை லட்சியமாக ஏற்றுக் கொண்டோம். மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளி வளாகத்தில் சி.சி.டி.வி கேமிராக்கள், பொது அறிவு மேம்பட டிஜிட்டல் நூலகம், உயர்தர வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டு, தரமான இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறை, என ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்தோம். ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற பள்ளி பள்ளியை வந்து பார்த்த முன்னாள் மாணவர்கள் ஐ.எஸ்.ஓ தரச்சான்றுக்கு விண்ணப்பிக்க ஆலோசனை வழங்கினார்கள். தரச்சான்று வழங்கும் அதிகாரிகள் மூன்று முறை இங்கு வந்து விரிவாக ஆய்வு செய்த பின்னரே இந்த தரச்சான்றை வழங்கினார்கள். பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கூட்டு முயற்சி தான் அனைத்திற்கும் முக்கிய காரணம்" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/education/selam-konda-nayakkan-government-elementary-school-tn-first-iso-certify-school




