புதுடெல்லி, மருத்துவ சிகிச்சைக்காக திரிணமுல் காங். எம்பி அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மம்தா பானர் ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி எம்.பி., அமலாக் கத்துறை மற்றும் மாநில போலீஸ் சி.ஐ.டி. விசாரணை வளையத்தில் உள்ளார். இதற்கிடையே, கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனு மதி கோரி அவர் தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். அம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய் மால்யா பக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, 3 வாரங்களுக்கு வெளிநாடு செல்ல அபிஷேக் பானர்ஜிக்கு அனுமதி அளித்தது. மேலும் விரிவான பயணத்திட்டம், செல்லவிருக்கும் நாட்டில் உள்ள உள்ளூர் முகவரி, சிகிச்சை பெறும் மருத்துவமனையின் விவரங்கள், தங்கும் நாட்கள், விமான சேவை விவரங்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் புலனாய்வு அமைப்புகளால் கண்காணிக்க மட்டுமே பயன்டுத்தப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/supreme-court-allows-mamatas-son-in-law-to-travel-abroad




