திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். முருகனுக்கும், அவரது மாமனார் பரசுராமனுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஊசாம்பாடி அருகே உள்ள திருவண்ணாமலை-வேலூர் நெடுஞ்சாலையில் முருகன் பட்டப்பகலில் தனது மாமனார் பரசுராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பரசுராமனை, அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரசுராமன், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம், பரசுராமனை வெட்டிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியோட முயன்ற முருகனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-medical-shop-owner-hacks-father-in-law-with-a-sickle-following-a-family-dispute




