கொழும்பு, இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 363 ரன்கள் குவித்துள்ளது. காயம் காரணமாக விளையாடாத கில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி 3 நாள் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. கொழும்பில் உள்ள என்.சி.சி. மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த ஆட்டத்தில், இந்திய கேப்டன் சுப்மன் கில் வலது கை மோதிர விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் களமிறங்கவில்லை. டாஸ் போட்ட கே.எல்.ராகுல் கில் இல்லாததால், இந்திய அணியின் சார்பில் கே.எல். ராகுல் டாஸ் போட வந்தார். இதில் டாஸ் வென்ற இலங்கை லெவன் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி, தொடக்கம் முதலே சீரான ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தியது. 363 ரன்கள் குவித்த இலங்கை லெவன் இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை லெவன் அணி 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ரவிந்து ரசந்தா 71 ரன்களும், நிஷான் மதுஷ்கா 66 ரன்களும், சோனல் தினுஷா 52 ரன்களும் எடுத்தனர். மேலும் பசிந்து சூரியபண்டாரா 35, பவன் ரத்நாயக்கே 39, ரமேஷ் மெண்டிஸ் 32 ரன்கள் சேர்த்து அணிக்கு வலுசேர்த்தனர். இந்தியா அசத்தல் பந்துவீச்சு இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் மனவ் சுதார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது கேஷர நுவந்த 9 ரன்களிலும், திலும் சுதீரா 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/warm-up-match-india-takes-the-field-without-gill-sri-lanka-xi-piles-up-363-runs-on-day-1




