விஜயவாடா, மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பெண்களுக்கு இலவச ஏ.சி. பஸ் திட்டமும் அமல்படுத்தப்படும் என ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 26,401 ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழைகளுக்கு பட்டாபிஷேகம் திட்டத்தின் கீழ் 26,401 ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: 2 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டா தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினோம். மத்திய அரசின் ஒத்துழைப்போடு நம்முடைய ஆட்சி வெற்றி நடைபோடுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கி உள்ளோம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் பெண்களுக்கு இலவச ஏ.சி. பஸ் திட்டம் மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பெண்களுக்கு இலவச ஏ.சி. பஸ் திட்டமும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/free-ac-bus-scheme-for-women-in-andhra-pradesh-soon-chief-minister-chandrababu-naidu-announces




