Full Article
தமிழ்நாடு மாநில காங்கிரஸின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பொறுப்புகளை மாணிக்கம் தாகூரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மாணிக்கம் தாக்கூர், ``செல்வப்பெருந்தகை தன்னைக் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கச் சொன்னதால், நான் இந்தப் பொறுப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை மல்லிகார்ஜுன கார்கேவின் முடிவுகள் தெளிவாகத் தெரிகிறது. செல்வப்பெருந்தகை - மாணிக்கம் தாக்கூர் காமராஜர் இந்தக் கட்சிக்காகச் சேர்த்து வைத்த சொத்துகளை மீட்ட பெருமை செல்வப்பெருந்தகையைச் சேரும். கிராம காங்கிரஸ் அமைப்பில் கிராம காங்கிரஸ் சகோதரர்களுக்கு ஐடி கார்டு கொடுத்தது என இரண்டு ஆண்டுகளில் மிக முக்கியமான மாற்றங்களை செல்வப்பெருந்தகை முன்னெடுத்திருக்கிறார். கிருஷ்ணசாமி தலைவராக இருந்தபோது 2006-ல் மத்தியில் ஆட்சியில் இருந்தோம். மாநிலத்தில் நம் ஆதரவால் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது. 2014-ல் நாம் தோற்ற பிறகு திருநாவுக்கரசரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. Congress: மாணிக்கம் தாகூர் தலைவராக நியமனம்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடி மாற்றம்! அந்தக் காலக்கட்டத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் நாம் ஆட்சியில் இல்லை. இந்தச் சூழலில் கட்சியை உற்சாகமாக மேம்படுத்தியவர் திருநாவுக்கரசர். அவருக்குப் பிறகு அழகிரியிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. இவரின் பொறுப்பின்போது 2019 தேர்தலில் 8 இடங்களில் வெற்றிபெற்றோம். 2021-ல் 18 சட்டமன்ற உறுப்பினர்களாக உயர்ந்தோம். தொடர்ந்து தேர்தல்கள் நமக்கு நிறையப் பாடங்களைக் கொடுத்தது. கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் கடைசி நேரத்தில் வண்டியிலிருந்து இறக்கிவிட்டுவிடலாம் என்ற திட்டங்களெல்லாம் செயல்படுத்தப்பட்டது. எனவே, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிலிருந்து பாடங்களைக் கற்று, நியாயமான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். இந்தத் தலைமைப் பொறுப்பு என்பது தொடர் ஓட்டப்பந்தயம். இந்த ஓட்டப்பந்தயத்தில் ஒரு பகுதியாகத்தான் ஆட்சியில் பங்கு என்ற இந்த இடம் வரை வந்திருக்கிறோம். மாணிக்கம் தாக்கூர் - மல்லிகார்ஜுன கார்கே தமிழ்நாடு காங்கிரஸ் எனக்குப் புதிது. 1997-ல் அகில இந்திய மாணவர் காங்கிரஸ் அணியில் இணைந்தது முதல் 2006 வரை மாநில காங்கிரஸில் நான் எந்தப் பொறுப்பிலும் இருந்ததே கிடையாது. என்மீது குறைபாடுகள் இருக்கலாம், என் பார்வை வேறாக இருக்கலாம். எனவே, நாம் எல்லோரும் சேர்ந்து கலந்துரையாடி காங்கிரஸ் கட்சியை அடுத்த இடத்திற்குக் கொண்டுச் செல்ல வேண்டும். `ஸ்டாலின் இப்படிச் சொல்வது அவரின் உயரத்துக்கு அழகல்ல' - சிபிஐ வீரபாண்டியன் விமர்சனம்! எனக்கும் தி.மு.க தலைவர்களுக்கும் வாய்க்கா வரப்பு சண்டையா என்ன? அவர்கள் எப்போது காங்கிரஸை அடித்தார்களோ, அப்போதே நான் திருப்பி அடித்தேன். யார் அடித்தாலும் திருப்பி அடிக்கப்படும். நாங்கள் அமைதியானவர்கள். யார் குடும்பத்தையும் கெடுக்காதவர்கள். எப்போது, இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் துரோகி என்றாரோ அப்போதுதான் நான் அவரைக் குறித்துப் பேசத் தொடங்கினேன். தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, நாம் தமிழர் என யார் காங்கிரஸை அடித்தாலும் திருப்பி அடிப்போம். மேகதாது அணை விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடுதான். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். மேகதாது அணைக்காக ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம். ராகுல் காந்திதான் எங்களின் முகம். நாங்களெல்லாம் கருவிதான். எனவே, அவரைத் தொட்டாலும் விடமாட்டோம். உதயநிதி ஸ்டாலின் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறோம். இந்த இரண்டு அமைச்சர்களும் ரிசர்வேஷன் கேட்டகரியிலெல்லாம் வரவில்லை. உழைப்பால் மேலே வந்தவர்கள். எனவே, இப்போது, ஆட்சியில், கூட்டணியில் இருக்கும்போதே கட்சியைப் பலப்படுத்த வேண்டும். எனவே, த.வெ.க எப்படி விஜயை முன்னிறுத்தி வெற்றிப் பெற்றதோ, அப்படி ராகுல் காந்தியை நாம் முன்னிறுத்த வேண்டும். அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும். விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' - திருமாவளவன் விளக்கம்! இந்தத் தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற முடியாது என்பது தெளிவாகிவிட்டது. ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.5 லட்சம், கவுன்சிலருக்கு ரூ.10 லட்சம், மாவட்ட கவுன்சிலர் ஆக ரூ.25 லட்சம், சேர்மன் ஆக ரூ.1 கோடி, எம்.எல்.ஏ ஆக ரூ.10 கோடி, எம்.பி ஆக ரூ.25 கோடி என்ற ரேட் டேக் எல்லாம் இனி யாராலும் கொண்டுவரமுடியாது. எனவே, உழைப்போருக்கு மட்டுமே பதவி என்ற சூழல் உருவாகியிருக்கிறது. நமது அடுத்த இலக்கு ராகுல் காந்தியைப் பிரதமராக்குவதுதான். நீட் விலக்கு, காவிரி நதி நீர் வரத்து, மீனவர் பாதுகாப்பு, தமிழ்நாட்டுக்கான நிதி விடுவிப்பு, மாநிலக் கடன் சுமையில் மத்திய அரசின் பங்கீடு என இதெல்லாம் செய்வதற்கு ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். ராகுல் காந்தி - மாணிக்கம் தாக்கூர் த.வெ.க கூட்டணி என்பது நமக்கு மரியாதையான கூட்டணி. எனவே, அதைக் கட்டிக்காக்க வேண்டும். அவர்களும் அப்படியே இருப்பார்கள் என நம்புகிறோம். இரண்டு அமைச்சர்களும் வாரத்தில் ஒருநாள் கட்சி அலுவலகத்துக்கு வந்து தொண்டர்களைச் சந்திக்க வேண்டும். உங்களை மலைபோல் நம்பியிருக்கிறோம். கிரிஷ் சோடங்கர் மிகத் தெளிவாக காங்கிரஸின் உயர்வை மட்டுமே மையமாக வைத்துச் செயலாற்றியிருக்கிறார். அவரை மறந்துவிட முடியாது. எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டுக்கு எவ்வளவு காசு கொடுக்கலாம் எனத் திட்டமிடத்தான் தெரிகிறதே தவிர, மக்களுக்காகப் பேசியதில்லையே. எனவே, அரசியல் மாறுகிறது. அதனால் நாம் எல்லோரும் சேர்ந்து புதிய பலத்தைக் கொண்டுவருவோம். நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40-ம் காங்கிரஸுக்குக் கொண்டுவருவோம்." என்றார். ``மக்களை ஏமாற்றுவதற்கான RSS-BJP அமைப்பின் Plan B தயாராகிறதா?”- மாணிக்கம் தாக்கூர் சொல்வது என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below


