மாஸ்கோ, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும். முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான 'கரோனா' மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியே முழு சூரிய கிரகணத்தின் சிறப்பம்சமாகும். முழு சூரிய கிரகணம் விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், நேற்று நிகழ்ந்தது. இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கண்டு ரசித்தனர். ரஷ்யாவில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு சந்திரன் முதன்முதலில் சூரியனை மறைத்தது. அப்போது அதன் வெளிப்புற ஒளிவட்டத்தின் மினுமினுப்பான ஒளி மட்டுமே எஞ்சியிருந்தது. 27 ஆண்டுகளுக்குப் பின் அதன்பின் ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக் நகரில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை வானியல் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர். ஐரோப்பிய நாடுகளில் சூரியன் மறையும் நேரத்தில் கிரகணம் நிகழ்ந்ததால் கிரகணத்துடன் கூடிய சூரிய அஸ்தமனத்தை காணும் அரிய வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ஸ்பெயினில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தைக் கண்டு மக்கள் ஆர்ப்பரித்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் சூரிய கிரகணத்தை கண்டு களித்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை பகுதி சூரிய கிரகணம் கடந்து சென்றதை மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வடமேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், கனடாவின் பெரும் பகுதி மற்றும் வட அமெரிக்காவின் சில இடங்களில் பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்திய நேரப்படி இரவு 11.16 மணிக்கு சூரிய கிரகணம் நடைபெற்றதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/this-years-total-solar-eclipse-people-marveled-at-the-spectacular-astronomical-event




