நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் கிட்டத்தட்ட ஒரு மாதக்காலம் போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. ஜூலை 20-ம் தேதி, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றனர். அப்போது போலீசார் அவர்கள் மீது பெல்லட் குண்டுத் தாக்குதல் நடத்தினர். இந்தப் பெல்லட் குண்டுத் தாக்குதலில் சாஹில் லோச்சாப் என்பவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை அழைத்துக்கொண்டு இன்று காலை நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தார் ராகுல் காந்தி. ஜந்தர் மந்தர் CJP போராட்டம்சர்க்கரை விலை ஏன் உயர்ந்தது? மத்திய அரசு சொன்ன காரணங்கள் இதோ! விலை உயர்வை தடுக்க 5 நடவடிக்கைகள் அந்தத் தாக்குதல் குறித்து எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி முயன்றார். ஆனால், போலீசார் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், அங்கேயே தர்ணாயில் ஈடுபட்டார் ராகுல் காந்தி. இதையடுத்து, இன்று இரவு இந்தச் சம்பவத்திற்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவிற்குப் பிறகு, ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது. “நீதிக்கான முதல் படி இதுதான். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது. குண்டுகளின் துகள்கள் இன்னும் அவரது உடலிலேயே இருக்கின்றன. இவ்வளவு நேரம் ஆகிவிட்டது அதில் மூன்று துகள்கள் அவரது கண்ணில் இருப்பதால் அவரால் பார்க்க முடிவதில்லை. மூன்று அல்லது நான்கு துகள்கள் அவரது இதயத்திற்கு மிக அருகில் உள்ளன. இந்த இளைஞனுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நாங்கள் இன்று காலை 11:00 அல்லது 11:30 மணிக்கு இங்கு வந்தோம். இத்தனை நேரமாக இங்கேயேதான் இருக்கிறோம்—இப்போது மணி மாலை ஏழேகால் ஆகப்போகிறது—இப்போதுதான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்திஅடுத்தடுத்து பண்டிகை சீசன்; தங்க நகை வாங்க பிளான் இருக்கிறதா? 'இதை' நோட் செய்து வாங்கினால் லாபம்! கிராமத்திலோ, சிறிய நகரத்திலோ எப்படி நீதி கிடைக்கும்? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள், எத்தனையோ குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள், எத்தனையோ பேர் துப்பாக்கியால் சுடப்படுகிறார்கள், பலர் உடலுக்குள் குண்டுகளின் துகள்களைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். இந்தக் காவல் நிலையம் டெல்லியின் மையப்பகுதியிலேயே உள்ளது. இருந்தபோதிலும் இங்கு நீதி கிடைப்பதில்லை. அப்படியென்றால், ஒரு கிராமத்திலோ அல்லது சிறிய நகரத்திலோ உள்ள காவல் நிலையத்தில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? நாங்கள் இங்கு எந்தத் தவறும் செய்யவில்லை. ஒரு இந்தியக் குடிமகனுக்கு—அவரது தாய் மற்றும் தந்தைக்கு—நீதி வேண்டும் என்றுதான் கேட்டோம். பிரேக் போட்டு தடுத்தது இவர் தான் ஆனால் அதற்கு 8 மணி நேரம் ஆகியிருக்கிறது. இதற்கு இறுதிக்கட்ட ஒப்புதல்—அந்தக் கடைசி அனுமதி—உள்துறைச் செயலாளரிடமிருந்தும் அமித் ஷாவிடமிருந்தும்தான் வர வேண்டியிருந்தது. அதன்பிறகுதான் இறுதியாக எஃப்.ஐ.ஆர் வழங்கப்பட்டது. எனவே, எஃப்.ஐ.ஆரை யார் தடுத்து நிறுத்தினார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். இந்தக் காவல் அதிகாரிகள் அதைப் பதிவு செய்யவே விரும்பினார்கள். மற்றவர்களும் அதைச் செய்ய நினைத்தார்கள். ஆனால் நீதிக்கான பிரேக் மேலிடத்திலிருந்து போடப்பட்டது.” ரூ.97 வரை சரிந்த இந்திய ரூபாய்; இப்போது ரூ.95-96-ல் நிலைப்பது ஏன்? 4 காரணங்கள் என்னென்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/justice-has-begun-rahul-gandhi-after-fir-in-pellet-case




