சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; “தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்குத் தாரைவார்க்க நீங்கள் யார்? பல்லாயிரம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பலநூறு மீன்பிடி படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள்" என்று இந்திராகாந்தி அரசைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கியபோது, இடைமறித்த காங்கிரசாரை நோக்கி, 'நீங்கள் எங்களின் துரோகிகள்' என்று அன்றே அடையாளப்படுத்தி வெளிநடப்பு செய்த உறங்காப்புலி. களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் தொகுதி மாறாது வென்று சரித்திர சாதனை படைத்த ஒப்பற்ற தலைவர். உசிலம்பட்டி, நீலித்தநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கல்லூரிகளை நிறுவி சாதி, மதம் பாராது ஏழை குழந்தைகளுக்கு இலவச தங்குமிடமும், உணவும், கல்வியும் தந்த வள்ளல். வட இந்தியாவில் குடியேறும் அகதிகளைவிட தமிழ்நாட்டு மக்களுக்கு குறைவான நிதி ஒதுக்குவதாக அன்றே இந்திய அரசை கண்டித்து தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்த பெருந்தகை. இந்திய கட்சிக்குத் தலைமையேற்றபோதிலும், இந்தியைத் திணித்தால் இந்நாட்டின் ஒருமைப்பாடு உடைபடும் என்று இந்திய அரசை துணிவுடன் எச்சரித்த தீரர். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தி தென்மாவட்ட வறட்சியைப் போக்க வேண்டும்(1965), கிருஷ்ணா நதிநீரைக் கொண்டுவந்து சென்னையின் குடிநீர் தேவை தீர்க்க வேண்டும் (1969), தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் (1975), நதிநீர் பிரச்சனைகளைத் தீர்க்க நதிகளை நாட்டுடைமையாக்க வேண்டும் (1969) என்று தமிழ்நாட்டின் தீர்க்க முடியா சிக்கல்களுக்கு தீர்க்கத்தரிசனத்தோடு தீர்வு சொன்ன தேவர் தந்த தேவர் நம்முடைய தாத்தா மூக்கையாத்தேவரின் நினைவைப்போற்றுகின்ற இந்நாளில் அவரைப்போலவே உண்மையும், நேர்மையுமாக நின்று மண்ணுக்கும், மக்களுக்கும் பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்! 'தேவர் தந்த தேவர்' உறங்காப்புலி தாத்தா மூக்கையாத்தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-celebrate-the-great-renown-of-mookkaiya-thevar-seeman




