மும்பை புறநகர் ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் செய்வது மிகவும் சவாலான காரியம் ஆகும். அதோடு ரயிலில் ஏறி இருக்கைகளைப் பிடித்து அமர்வதில் ஒரு பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இதில் பயணிகள் இடையே அடிக்கடி சண்டையும் நடப்பதுண்டு. கடந்த மாதம் இது போன்ற ஒரு சண்டையில் வாலிபர் ஒருவர் புறநகர் ரயிலில் பயணிகள் முன்னிலையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது போன்ற சண்டையில் பெண் பயணிகளும் அடிக்கடி ஈடுபடுவதுண்டு. டோம்பிவிலி மற்றும் கல்யாண் இடையே மும்பை புறநகர் ரயிலின் முதல் வகுப்பு பெண்கள் பெட்டியில் இருக்கை தகராறில் ஒரு பெண் சக பயணிகள் மீது மிளகுப் பொடியை ஸ்பிரே தெளித்துள்ளார். மிளகுப் பொடியை ஸ்பிரே செய்த பெண் சத்ரபதி சிவாஜிரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மிளகுப் பொடியை ஸ்பிரே செய்த பெண் கல்யான் ரயில் நிலையத்தில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குப் புறப்படும் ரயிலில் இருக்கைகளைப் பிடிப்பதற்காக அந்த ரயில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து கல்யான் வரும்போது முந்தைய ரயில் நிலையத்தில் அதிகமான பயணிகள் ஏறி இருக்கைகளைப் பிடித்துக்கொள்வது வழக்கம். அவ்வாறு டோம்பிவலி ரயில் நிலையத்தில் இருந்து முன்கூட்டியே ஏறி வந்து ரயிலில் இருக்கைகளை ஆக்கிரமித்து இருந்த பயணிகளுக்கும், கல்யான் ரயில் நிலையத்திலிருந்து ஏறிய பெண் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இருக்கைகளில் அமர்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியில் முடிந்தது. அவர்களில் டோம்பிவலியில் இருந்து ரயிலில் ஏறிய பயணிகளில் ஒரு பெண் தன்னிடம் இருந்த மிளகுப் பொடியை சக பயணி மீது ஸ்பிரே செய்தார். இது குறித்து கல்யான் பயணிகள் உடனே ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மிளகு ஸ்பிரே அடித்த பெண் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதே போன்று பரேல்-அம்பர்நாத் ரயிலில் இருக்கைக்காக ஏற்பட்ட சண்டையில் மூன்று பேர் காயமடைந்தனர். மும்பை கனமழை: "நாளை போய்விடலாம்னு சொன்னேன்; ஆனா."- கட்டிடம் இடிந்ததில் குடும்பத்தை இழந்த நபர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/trending/mumbai-suburban-train-women-clash-and-spray-pepper-spray




