தாஷ்கன்ட் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, பிரதமர் மோடி நான்கு நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் விமான நிலையத்துக்கு நேற்று சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் நேரில் சென்று வரவேற்றார். இந்திய வம்சாவளியினர் கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். யோகா நிகழ்ச்சி இந்நிலையில் இன்று தாஷ்கண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். அவர் யோகா செய்து கொண்டிருந்தவர்களிடம் சிறிது நேரம் பேசினார். இந்தியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். பிரதமர் ரீல்ஸ் வீடியோ! யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். வீடியோவில் அவர் கூறியதாவது:- நமஸ்தே, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று சிறப்பாக யோகா செய்து காட்டி இருக்கிறீர்கள். அனைத்து வயதினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றீர்கள். என் நண்பரான உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/pm-modi-releases-reels-of-yoga-event-in-uzbekistans-capital-tashkent




