திண்டுக்கல், விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரணடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லம்பட்டி பிரிவில் சாலையோரத்தில் தனுஸ்ரீ(5), யோக வர்ஷி(11). அனன்யா(6) மற்றும் மோசிகீரன்(6) ஆகியோர் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வேன் ஒன்று, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதில் 4 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசில் சரண் இச்சம்பவம் குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரணடைந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/4-children-killed-near-vadamadurai-milk-van-driver-who-caused-the-accident-surrenders-to-police




