சென்னை, மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு திட்டங்களையும் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இதேபோல் கடந்த வாரம் மட்டும் சென்னையில் மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம், கோவையில் பெண் படுகொலை என தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியோர்கள் குறிவைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, மூத்த குடிமக்களின் பாதுகாப்பில் தவெக அரசு மெத்தனமாக செயல்படுவதையே காட்டுகிறது. கூடுதல் கவனம் தேவை தங்கள் வாழ்நாள் அனுபவங்களையும் நினைவுகளையும் சுமந்து நிம்மதியாக வாழ வேண்டிய முதியோர்கள், இன்று தனிமையிலும் அச்சத்திலும் வாழும் நிலைக்குத் தள்ளப்படுவது வேதனைக்குரியது. எனவே மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்களுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு திட்டங்களையும் தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும் முதியோர்களின் முதுமைக் காலத்தை அச்சமற்றதும் மகிழ்ச்சியானதுமாக மாற்ற குடும்பத்தினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-government-fails-to-ensure-the-safety-of-the-elderly-vanathi-srinivasan




