ஜெருசலேம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு செயல்பட்டு வருகிறார். இதனிடையே, இஸ்ரேல் நாடாளுமன்ற 4 ஆண்டுகள் பதவி காலத்தை நிறைவு செய்ய உள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் நாளுமன்ற தேர்தல் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைப்பு இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் ஏராளமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 27ம் தேதி தேர்தல் நடைபெற்றப்பின் நாடாளுமன்றம் புதிய அரசின் தலைமையில் கூட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 120 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு, நப்தலி பென்னெட் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/israels-parliament-dissolves-ahead-of-oct-27-elections




