சென்னை, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் சுதேசி உணர்வையும், நமது பாரம்பரியத்தின் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைப்பது கைத்தறி. உடுத்தும் ஒவ்வொரு கைத்தறி ஆடையின் பின்னாலும் ஒரு நெசவாளரின் வியர்வை, உழைப்பு, குடும்பத்தின் நம்பிக்கை ஆகியவை பின்னிப் பிணைந்துள்ளன. சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 7-ஆம் நாளை நினைவுகூரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு 2015 முதல் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடி, நெசவாளர்களின் திறமைக்கும், கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தேசிய கைத்தறி தினம் கைத்தறி என்பது வெறும் ஆடை அல்ல; அது நமது கலாசாரம், அடையாளம், தன்னிறைவு மற்றும் உழைப்பின் பெருமை. இந்த தேசிய கைத்தறி தினத்தில், "கைத்தறியை வாங்குவோம். நெசவாளர்களை வாழ வைப்போம். பாரம்பரியத்தை தலைமுறைகளுக்கு பாதுகாப்போம்!" அனைவருக்கும் தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/national-handloom-day-greetings-from-vanathi-srinivasan




