திருச்சி, திருச்சியில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரிடம் ‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி ரூ.17 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பள்ளி ஆசிரியர் திருச்சி அரியமங்கலம் வி.ஓ.சி. தெருவை சேர்ந்தவர் பிலோமின் ராஜ் (வயது 67). இவரது மனைவி, பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மாதம் 31-ந் தேதி பிலோமின் ராஜின் மனைவிக்கு செல்போனில் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை மதன்குமார் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு, தான் சி.பி.ஐ.யில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அப்போது அவர், உங்களின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு வங்கிக்கணக்கு உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த வங்கிக் கணக்கிற்கு ஒரு பெரிய தொகை மாற்றப்பட்டு உள்ளது. இதனால் நீங்கள் கைது செய்யப்படாமல் இருக்க பணம் செலுத்த வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார். அதனை நம்பிய பிலோமின் ராஜின் மனைவி, வங்கிக்கணக்கு மூலம் ரூ.17 லட்சத்தை, அந்த நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் தான் அவருக்கு, அந்த நபர் தன்னை மிரட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணை இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அந்த எண் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இது குறித்து பிலோமின் ராஜ் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-17-lakh-swindled-in-trichy-via-digital-arrest-scam




