சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்கள் அதனடிப்படையில், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரை திட்டப்பகுதிகள் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நாள்தோறும் பெரும்பாலான பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். மேலும், வார இறுதி நாட்களில் இங்கு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளைத் தூய்மையாக பராமரிக்கும் வகையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் நாள்தோறும் சுழற்சி முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/cleanup-efforts-underway-at-marina-beach




