திருவள்ளூர், கொட்டையூர் கிராமத்தில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் காலை சிற்றுண்டியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட சுமார் 40 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டையூர் கிராமத்தில் அரசினர் நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மொத்தம் கொட்டையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் 55 பேர் பயின்று வருகின்றனர். இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கோதுமை ரவா கிச்சடியும், சாம்பாரும் காலை சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. அப்போது சாப்பிடும்போது ஒரு மாணவரின் ரவா கிச்சடியில் பல்லி இருப்பதைக் கண்டு மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து உணவை சாப்பிட்ட சுமார் 40 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கலெக்டர் ஆறுதல் இதையடுத்து அவர்களை அவசர வாகனங்கள் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிகிச்சை பெறும் மாணவ, மாணவிகளிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர் இதுபற்றி பேசிய அவர், மாணவ- மாணவிகள் நலமுடன் இருப்பதாகவும், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார். சமையலரின் கவனக்குறைவுதான் இதற்கு கராணம் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/students-fainted-after-eating-food-contaminated-with-lizard-tiruvallur-collector-visited-hospital




