ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியிடம் நல்ல யோசனைகள் இருப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச ரஷிய நிபுணர்களுக்கான வால்டாய் கருத்தரங்கில் பேசிய புதின் கூறியதாவது: “பிரதமர் மோடியுடன் ரஷியாவுக்கு நல்ல நட்புறவு உள்ளது. இருப்பினும், உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கேள்வியை அவர் தொடர்ந்து எழுப்பி வருகிறார். இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை கண்டறிவதில் அவருக்கு மிகுந்த ஆர்வமும், நல்ல யோசனைகளும் உள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நடுநிலையான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்படுகிறார். பிரதமர் மோடியின் யோசனைகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றார். மோடி வலியுறுத்தல் உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. 4 ஆண்டுகள் ஆகியும் இந்த போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷியா -உக்ரைன் போரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இரு நாடுகளும் சிக்கியுள்ளன. ஆனாலும் போர் நீடித்துக்கொண்டே வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் தொடர்ந்து முயற்சியை முன்னெடுத்து வருகின்றன. பிரதமர் மோடியும் புதினிடம் பலமுறை இது குறித்து நேரிலேயே வலியுறுத்தியுள்ளார். இந்த யுகம் போருக்கானது இல்லை எனவும் மோடி கூறியிருந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் கிர்கிஸ்தானில் புதினை சந்தித்தபோதும், போர் நீடித்துக்கொண்டே இருப்பதால் போரில் இருந்து போர் முடிவுக்கு வரும் நிலைக்கு செல்ல வேண்டும்” என்று பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். மேலும், பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வே அவசியம் என்றும் அவர் கூறியிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/vladimir-putin-praises-pm-modi-says-he-has-good-ideas-for-ending-ukraine-war




