பாரத ரத்னா, பிரபல கர்நாடக சங்கீத பாடகி எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஜெர்சி, கிங்டம், மேஜிக் படங்களை இயக்கிய கெளதம் தின்னூரி இயக்க அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். எம். எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, ``உங்கள் எல்லார் முன்னாடியும் பேசுறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. இப்போ என்னோட மனசுல இருக்குற ஒரே உணர்வு நன்றி உணர்ச்சி மட்டும்தான். ராஷ்மிகா மந்தனா நீங்க எல்லாரும் இங்க வந்து எங்களோட சேர்ந்து அம்மாவோட இந்த ஸ்பெஷல் நாளை செலிப்ரேட் பண்ண வந்திருக்கீங்க, அதுக்கு ரொம்ப நன்றி. இன்னைக்கு நாங்க உங்களை செலிப்ரேட் பண்ணப்போறோம் அம்மா. இதைப் பார்க்கும்போது உங்க முகத்துல வர்ற அந்தச் சின்ன சிரிப்பு எனக்கு அவ்ளோ மகிழ்ச்சியைத் தரும். உங்க குரல்ல ஒரு தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கு. அதைக் கேட்கும்போது இறைவனின் முன்னிலையில் உக்காந்திருக்க மாதிரியான ஒரு உணர்வு எனக்கு உண்மையிலேயே ஏற்படுது. அம்மா, உங்க வாழ்க்கையில ஒரு சின்ன பகுதியா இருக்குறதுக்கு என்னை தேர்ந்தெடுத்ததுக்காக நான் எப்பவுமே உங்களுக்குக் கடமைப்பட்டிருப்பேன். உங்களுடைய ஆசீர்வாதம், சதாசிவம் சார் ஆசீர்வாதம், சண்முகவடிவு அம்மா ஆசீர்வாதம் மற்றும் உங்க குடும்பத்தினர், நலவிரும்பிகளின் ஆசீர்வாதம் எப்போதும் என் கூடவே இருக்கட்டும். நான் கண்டிப்பா என்னோட சிறந்த பங்களிப்பைக் கொடுப்பேன்னு வாக்குறுதி தர்றேன். ஹாப்பி பர்த்டே அம்மா!" எனக் கொஞ்சும் தமிழில் பேசினார். ‘‘நடிகை த்ரிஷா திருச்சியில் போட்டியிடலாம்!’’ முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/kollywood/actress-rashmika-mandanna-is-starring-in-biopic-of-ms-subbulakshmi



