மும்பை-டெல்லி இடையே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும் முடிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் ரிஷிகேஷ் நகரில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூருக்கு சொகுசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் இன்று அதிகாலையில் ராஜஸ்தான் மாநிலம் தவுஷா என்ற இடத்தில் வந்தபோது டிரைலர் லாரி மீது மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 7 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பஸ்ஸில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். பஸ், டிரைலர் லாரி மீது மோதிக்கொண்டதும் இரண்டுமே தீப்பிடித்துக்கொண்டன. இதனால் தீயில் கருகி பயணிகள் உயிரிழக்க நேரிட்டது. தீப்பிடித்த வாகனங்கள் பஸ் படுக்கை வசதி கொண்டது ஆகும். பஸ், டிரைலர் லாரி மீது மோதிக்கொண்டபோது பஸ்ஸின் மேல் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் வெளியில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்களது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்தனர். மற்ற 5 பேர் தீக்காயத்தால் இறந்தனர். தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் இரண்டு வாகனத்திலும் பிடித்த தீயை அணைத்து உள்ளே சிக்கிக்கொண்டிருந்த பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் தீவிபத்து ஏற்பட்டு ஒரு மணி நேரம் கழித்த பிறகே தீயணைப்புத் துறையினர் வந்தனர் என்றும், அதனால்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அதோடு பஸ்ஸில் அதிக அளவு சிகரெட் ஏற்றிச்செல்லப்பட்டதாகவும், எனவே தீ பஸ்சில் வேகமாகப் பரவியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நெடுஞ்சாலை என்பதால் டிரைவர் மிகவும் வேகமாக பஸ்ஸை ஓட்டியதாகவும், டிரைவர் பஸ்ஸை ஓட்டிக்கொண்டிருந்தபோது உறங்கியதால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிவகாசி: 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் காயம் அடைந்தது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/accidents/7-killed-after-luxury-bus-crashes-into-trailer-truck-and-catches-fire



