புதுடெல்லி, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:- நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது என்றும், இந்த விவகாரத்தில் அரசு அமைதியாக இருந்திருந்தால் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருந்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை நியாயப்படுத்த முடியும் என்றும் கூறினார். நடவடிக்கை இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மட்டத்திலேயே ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள்களை கசியவிட்டவர்கள், வாங்கியவர்கள் மற்றும் விற்றவர்கள் மீது விரைவு நீதிமன்றங்கள் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தண்டனை தங்களது சுயநலத்திற்காக நீட் வினாத்தாள்களை வாங்கி, விற்று, கசியவிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடிய இந்தக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, விரைவில் உரிய தண்டனை பெறுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/all-those-involved-in-neet-question-paper-leak-have-been-arrested-nirmala-sitharaman




