சிவராஜ்குமார் மற்றும் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவிந்த் நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருந்தனர். காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் ரஜினிகாந்திடமும் படக்குழு பாராட்டு பெற்றது. அறிமுக இயக்குநர் கெளதம் சிவராமன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய திரைப்படத்தில் யோக லட்சுமி, கானா வினோத், நடிகை ஷிவானி நாகராம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில், நடிகர் சிவராஜ்குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் துவங்கியது. படத்தின் அறிவிப்பு கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவு: இந்த நிலையில், டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகும் படத்தில் அபிஷன் ஜீவிந்த் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிவ ராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். பிரகதீஷ் பிரபு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் எக்ஸ் தள பதிவு: இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்ததை வீடியோ வெளியிட்டு, “சிவ ராஜ்குமார், அபிஷன் ஜீவிந் உடனான அற்புதமான தருணங்களை உருவாக்கினார்கள். டிராமா கம்பெனி தயாரிப்பில் முதல் படம். இந்தப் பயணம் மகிழ்ச்சி, சகோதரத்துவம், காதல், சிரிப்பு, தொடர்ச்சியான உழைப்பு என எப்போதும் நினைவுகளைக் கொண்டாடும் வகையில் நிரம்பியுள்ளது. விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு விரைவில்” என குறிப்பிட்டுள்ளது. ஹார்ட் பீட் தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற நடிகை யோகலட்சுமி, முன்னணி இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. That’s a wrap. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/abishan-shivarajkumar-film-shooting-has-been-wrapped-up



