வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கியது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்ற 24வது லீக் ஆட்டத்தில் வாஷிங்டன் பிரிடம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. 192 ரன்கள் இதில், டாஸ் வென்ற வாஷிங்டன் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த லாஸ் ஏஞ்சல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆண்ட்ரே பிளட்சர் அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் வெற்றி இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வாஷிங்டனை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய லாஸ் ஏஞ்சல்ஸ் வீரர் ரசல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/los-angeles-knight-riders-beats-washington-freedom-in-major-league-cricket




