ஈரோடு, ஆசனூர் அருகே மரம் விழுந்ததில் காயம் அடைந்த குட்டி யானை இறந்தது. உடல் நலம் பாதிப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை குட்டி யானை ஒன்று தாயை பிரிந்து வெளியேறியது. பின்னர் அந்த யானை தமிழக-கர்நாடக மாநில எல்லையான காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே வந்தது. அப்போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அந்த இடத்திலேயே படுத்தது. வனத்துறையினரை விரட்டியது இதைத்தொடர்ந்து சோதனைச்சாவடி குட்டி வன ஊழியர்கள் அங்கு சென்று யானையை எழுப்பமுயன்றனர். ஆனால் யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இதற் கிடையே அங்கு வந்த தாய் யானை குட்டி யானையை சுற்றி சுற்றி வந்து பாசப்போராட்டம் நடத்தியது. யாரையும் குட்டி யானை அருகே நெருங்கவிடவில்லை. இதனால் சோதனைச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து குட்டி யானை படுத்து கிடந்த இடம் கர்நாடக வனத்துறைக்குட்பட்ட பகுதி என்பதால் கர்நாடகா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு செல்ல முயன்றனர். ஆனால் தாய் யானை அவர்களையும் துரத்தியுள்ளது. மேலும் இரவு ஆனதால் வனத்துறையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். குட்டி யானை சாவு இதைத் தொடர்ந்து நேற்று காலை நடை டாக்டர் மற்றும் கர்நாடகா வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்றனர். பின்னர் பட்டாசு வெடித்து தாய் யானையை அங்கிருந்து விரட்டிவிட்டனர். - அதன்பின்னர் படுத்து கிடந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குட்டி யானை இறந்தது. இதுகுறித்து கால்நடைடாக்டர் கூறும்போது, 'இறந்த ஆண் குட்டி யானைக்கு 2 வயது இருக்கும். குட்டியானையின் கழுத்தில் மரம் விழுந்துள்ளது. இதனால் படுகாயம் அடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது' என்றனர். தொடர்ந்து யானையின் உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்டு அங்கேயே குழி - தோண்டி புதைக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/calf-elephant-dies-after-tree-falls-mother-elephants-emotional-struggle




